• Apr 24 2026

வேட்டையன் படத்தில் அபிராமியின் பெயர் என்ன தெரியுமா? நியூ அப்டேட் நியூஸ் இதோ...

shali / 1 year ago

Advertisement

Listen News!

தமிழின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்துவரும் திரைப்படம் வேட்டையன். 170 வது படமாக அறிவிக்கப்பட்ட "வேட்டையன்" படத்தின் படப்பிடிப்பு வேலைகள் கடுகதியில் நடைபெற்று வருகின்றன. டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் இத் திரைப்படத்தை  லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார்.


அமிதாப் பச்சன் , ஃபஹத் பாசில் , , மஞ்சு வாரியர் , ரித்திகா சிங் ,அபிராமி மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைத்திருக்கும் இப் படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு  அக்டோபர் மாதமளவில் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த திரைப்படத்தில் நடிகை அபிராமி தனது இன்ஸ்டா பக்கத்தில் "வேட்டையனுக்கு டப்பிங் தொடங்கியது! ஓஹோ! காத்திருக்க முடியாது! " என்னும் பதிவுடன் "வேட்டையன்" படத்திற்கான டப்பிங் வேலையில் தானிருக்கும் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.இந்நிலையில் இந்த படத்தில் நடிகை அபிராமி "சுவேதா" கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. 



Advertisement

Advertisement