• Dec 18 2025

கமல்ஹாசன் இடத்தில் விஜய் சேதுபதியா! பிக்பாஸ் முன்னாள் போட்டியாளரான ரச்சிதா என்ன சொன்னார் தெரியுமா?

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் கமல்ஹாசன் அவர்கள் இதுவரையில் பிக் பாஸ் சீசன் 7 வரையில் நிகழ்ச்சி தொகுத்துவழங்கி வந்தார்.  நிகழ்ச்சி இதுவரை 7 சீசன்கள் முடிவடைந்துவிட்டது.  தற்போது இந்த 8வது சீசனை கமல்ஹாசன் அவர்களுக்கு பதில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார். 


அவர் இடம்பெறும் இந்த 8வது சீசன் எப்படி இருக்கப்போகிறது என்பதை காண ரசிகர்களும் ஆர்வமாக தான் உள்ளார்கள். இந்த நிலையில் பிக்பாஸ் முன்னாள் போட்டியாளரான ரச்சிதா "கமல்ஹாசன் அவர்களின் தீவிர ரசிகை நான், இந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடிகர். அனுபவம், அறிவாற்றல் பெற்றவர் என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார்"


எந்த தலைப்பு கொடுத்தாலும் பார்வையாளர்களை கவரும் வண்ணம் பேசுவார். விஜய் சேதுபதி இனிமையானவர், பணிவானவர், நேர்மறை குணங்களைக் கொண்டவர். இருந்தாலும் போட்டியாளர்களை கையாள்வதில் கமல்ஹாசன் உடன் ஒப்பிட முடியாது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதை மற்றவர்களை போலவே நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்றுகூறியுள்ளார். 

Advertisement

Advertisement