• Oct 08 2024

சுடசுட வந்த அப்டேட்... வேட்டையன் ட்ரெய்லர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா தயாரித்த இப்படம் வருகிற அக்டோபர் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. லால் சலாம், இந்தியன் - 2 படங்களின் தோல்வியால் லைகா நிறுவனம் நிதி நெருக்கடியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. 


வேட்டையன் படத்தின் வெற்றியைப் பொறுத்தே விடாமுயற்சியின் நிலை தெரிய வரும். சமீபத்தில் வெளியான வேட்டையன் படத்தின் டீசரில் நடிகர் ரஜினிகாந்த், “ என்கவுன்டர் என்பது குற்றம் செய்வதர்களுக்கு கொடுக்கும் தண்டனை மட்டுமல்ல "இனிமேல் இதுபோல் நடக்கக் கூடாது என்பதற்காக எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை” என்கிற வசனத்தைப் பேசியுள்ளார்.


இதனால், வேட்டையன் திரைப்படம் என்கவுன்டரை நியாயப்படுத்தும் படமாக உருவாகியிருப்பதாகவே பலரும் கருதுகின்றனர். இந்த நிலையில், படத்தின் டிரைலர் வருகிற ஆக்டொபர் 2 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. 

Advertisement