தமிழ் திரையுலகில் தன்னுடைய தனித்துவமான நடிப்பு மற்றும் பளிச்சிடும் பேட்டிகள் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள நடிகர் கூல் சுரேஷ், சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அளித்த விமர்சனத்துடன் கூடிய பேட்டி தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

இந்த சந்திப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் மற்றும் அரசியல் பின்னணிகளைப் பற்றிய தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
அதாவது, “2026ல் லெஜெண்ட் சரவணன் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இடையேயான போட்டியை எதிர்பாருங்கள். மேலும், 2031ல் சிவகார்த்திகேயன் தான் முதலமைச்சர் ஆக இருப்பார். நடக்கலன்னா பாருங்க...” என்ற அவரது கருத்துகள் இணையத்தில் வைரலாகி, ரசிகர்கள் மற்றும் திரை விமர்சகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
கூல் சுரேஷின் இந்த கருத்து, சமூக வலைத்தளங்களில் பரவியதும், ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!