பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் பட்டி தொட்டி எல்லாம் பார்க்கப்பட்டு மாபெரும் வெற்றி அடைந்தது. இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் நடித்திருந்தனர்.
அதன் அடுத்த பாகமாக புஷ்பா தி ரூல் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படம் டிசம்பர் 5 அதாவது நாளை பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ளது. அதனால், படக்குழுவினர் தமிழகம், கேரளம், மும்பை மற்றும் வெளிநாடுகளிலும் புரமோசன் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் புஷ்பா படம் குறித்து ராஜமெளலி இவ்வாறு விமர்சனம் செய்துள்ளார். புஷ்பா – 2 படத்தை விளம்பரம் செய்ய வேண்டியதில்லை. இந்திய மக்கள் இப்படத்தை பார்க்க ஏற்கனவே டிக்கெட்டுகள் வாங்கிவிட்டனர்.
படத்தில் புஷ்பராஜ் எண்ட்ரி காட்சியை சுகுமார் எனக்கு போட்டுக் காண்பித்தார், நன்றாக இருந்தது. முதல் காட்சியே இப்படி இருக்கிறது என்றால் மொத்தப் படம் எப்படி இருக்கும் என நினைத்துப் பாருங்கள்” என்று கூறியுள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் ஆர்வத்தில் அலைகிறார்கள். நாளை எப்போது விடியும் என காத்திருக்கிறார்கள்.
Listen News!