• Oct 13 2026

ரஜினிக்கு அடித்த ஜாக்பாட்.! ‘ஜெயிலர் 2’ படத்தில் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

shali / 58 minutes ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் தொடர்பான புதிய தகவல் தற்போது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்திற்காக ரஜினிகாந்த் பெற்றுள்ளதாகக் கூறப்படும் சம்பளம் குறித்த தகவல் திரையுலகில் பேசுபொருளாகியுள்ளது.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தின் மீதும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


வரும் 15ஆம் திகதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்திற்கான முதல் நாள் காட்சிகளின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும், அமெரிக்கா, மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இப்படத்தில் நடித்ததற்காக ரஜினிகாந்துக்கு சுமார் 110 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி, திரைப்படத்தின் லாபத்திலும் அவருக்குப் பங்கு வழங்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, படம் எதிர்பார்த்ததை விட அதிக வசூலைப் பெற்றால், சம்பளம் மற்றும் லாபப் பங்கு உள்ளிட்டவற்றின் மூல-ம் ரஜினிகாந்தின் மொத்த வருமானம் சுமார் 180 கோடி ரூபாயை எட்டக்கூடும் எனக் கூறப்படுகிறது.

எனினும், அவரது சம்பளம் மற்றும் லாபப் பங்கு தொடர்பான தகவல்கள் இதுவரை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. படம் வெளியாகும் நிலையில், வசூல் சாதனைகள் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement