• Oct 13 2026

தளபதி விஜய்யை சந்தித்த பிறகு இப்படியொரு பதிவா.? விஜய் தேவரகொண்டா பகிர்ந்த சுவாரசியம்!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

முதல்வர் விஜய் உடனான சந்திப்பு குறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா, தனது நடிப்பால் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். அதேபோன்று, நடிகர் விஜய் தற்போது அரசியலிலும் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், அவரைச் சந்தித்த அனுபவத்தை விஜய் தேவரகொண்டா மனம் திறந்து பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அன்புக்குரிய தளபதி விஜய் சாருடன் மிகவும் அழகான தருணங்களைக் கழித்தேன். நீண்ட நாள்களுக்குப் பிறகும் மிகுந்த அன்புடன் எங்களை வரவேற்று, வாழ்க்கை, வேலை மற்றும் உலகம் குறித்து தனது தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். ஒரே சந்திப்பில் சார் எனக்குப் பிடித்தமானவராகிவிட்டார்...” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவு விஜய் தேவரகொண்டா, விஜய் மீது கொண்டுள்ள அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, விஜய்யுடனான சந்திப்பு தனக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்ததாக அவர் தெரிவித்திருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இரு நடிகர்களின் ரசிகர்களும் இந்தப் பதிவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள விஜய் தேவரகொண்டா, முதல்வர் விஜய் உடனான சந்திப்பு குறித்து இவ்வாறு நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருப்பது தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Advertisement

Advertisement