தமிழ் சினிமாவின் திரைப்பயணத்தில் 'குட் பேட் அக்லி' மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் குமார் தனது அதிரடியான நடிப்பில் திரையரங்குகளை அதிரவைக்கத் தயாராகியுள்ளார். இப்படம் ஏப்ரல் 10ம் திகதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல முக்கிய நபர்கள் நடித்துள்ளனர்.
மேலும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது. அத்துடன் ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் சமீபத்தில் வெளியான 'OG சம்பவம்' என்ற பாடல் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்பொழுது ஒரு பேட்டியில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் படத்திற்கான தலைப்பு எப்படி வந்தது என்பது குறித்துக் கதைத்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, அஜித் இப்படத்தின் கதையைக் கேட்டதும் இப்படத்திற்கு 'குட் பேட் அக்லி' என்ற தலைப்புத் தான் பொருத்தமாக இருக்கும் என்றார். மேலும் அஜித்தைப் போல மனஉறுதி உடைய நடிகரை யாராலும் பார்க்கமுடியாது என்றார்.இந்தத் தகவல் அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்ததுடன் படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.
Listen News!