தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பிரவேசித்து பின்னர் நடிகராக பயணத்தைத் தொடங்கிய ஹிப் ஹாப் ஆதி இன்று கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றார். ஒரு காலத்தில் அவரது இசை வைரலாகி இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வந்தது. ஆனால், கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு அவருடைய பயணம் எதிர்பார்த்த வரவேற்ப்பைப் பெறவில்லை.
சுந்தர். Cயின் 'ஆம்பள' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப் ஹாப் ஆதி பின்னர் தன்னுடைய இசை மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். ஆதி இசையில் வெற்றியைப் பெற்ற பிறகு, கதாநாயகனாக மாறிய முதல் படம் மீசைய முறுக்கு. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்பிறகு அவர் நடித்த நட்பே துணை, கொம்பு வச்ச சிங்கம்டா, சிவகுமாரின் சபதம் போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
கடந்த சில வருடங்களில் அவர் தயாரித்த பல படங்கள் பெரிய நஷ்டத்தை சந்தித்ததால் தற்போது அவர் கடும் நிதி நெருக்கடியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகராக முயற்சி செய்து, வெற்றி பெற முடியாமல் இருக்கும் ஹிப் ஹாப் ஆதி தற்போது மீண்டும் இசை துறைக்கு திரும்ப முயற்சி செய்வதாகவும் கூறியுள்ளார்.
Listen News!