• Jan 18 2025

ரசிகர்களுக்கு தீபாவளி பரிசு காத்திருக்கிறது! ரிலீஸாகும் 6 சூப்பர் திரைபடங்கள்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தீபாவளி பண்டிகைக்கு சரவெடியாக கோலிவுட் முதல் பாலிவுட் வரை கிட்டத்தட்ட ஆறு படங்கள் வெளியாகிறது. ரசிகர்களுக்கு இது பெரிய ட்ரீட்டாக இருக்க போகிறது. எந்த எந்த படங்கள் வரவிருக்கிறது என்று பாப்போம் வாங்க. 


நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் அமரன் படம் இந்த தீபாவளிக்கு வெளியாகிறது. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது.


இதைத்தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் லக்கி பாஸ்கர் படமும் அக்டோபர் 31 வெளியாகிறது. அடுத்ததாக ஜெயம் ரவி, பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் நடிப்பில் கலகலப்பாக உருவாகி இருக்கிறது பிரதர் படம். கவினின் பிளடி பகர் படமும் தீபாவளிக்கு தரை இறங்குகிறது. 


நவம்பர் ஒன்றாம் தேதி அஜய் தேவகன், அக்ஷய்குமார், தீபிகா படுகோன், டைகர் ஷெராப் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் சிங்கம் எகைன் படம் வெளியாகிறது. இந்த படத்திற்காக பாலிவுட் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.


அனீஸ் பாஸ்மி இயக்கத்தில் கார்த்திக் ஆர்யன் நடிப்பில் பூல் புலையா 3 படம் வெளியாகிறது. இந்த படங்கள் ரிலீசால் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். தீபாவளி எந்த படத்திற்கு வெற்றி படமாக இருக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். 




Advertisement

Advertisement