• Jan 19 2025

வாங்க மக்கா வாங்க..!! விஜய்யின் கட்சி மாநாட்டிற்கு இலவச டோக்கன் கொடுத்து அழைப்பு

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக காணப்படும் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் முதல் மாநில மாநாடு எதிர்வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இளைய தளபதி விஜய்க்கு என்றே கோடிக்கணக்கான ரசிகர்கள் காணப்படுகின்றார்கள். சினிமாவில் இவருக்கு மிகப்பெரிய அளவில் மார்க்கெட் உள்ளது. விஜய் எத்தனை கோடி ரூபாய் சம்பளம் கேட்டாலும் அவற்றை கொடுத்து படம் தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் போட்டி போட்டு வருகின்றார்கள்.

எனினும் இவற்றையெல்லாம் உதறி தள்ளிவிட்டு தனக்கு மக்கள் பணி தான் சேவை என்று நாட்டுக்காக சேவை செய்ய அரசியலில் களம் புகுந்துள்ளார் விஜய். கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு தான் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்து கட்சியை விரிவு படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தார்.

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த போதும் இது தொடர்பிலான கட்சிக் கொள்கைகள் இவற்றையும் வெளி  விடாமல் இருந்தார். இதற்கு விமர்சனங்கள் எழுந்தன. தற்போது இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலேயே அக்டோபர் 27 ஆம் தேதி மாநில மாநாட்டை நடத்த உள்ளார்.


இந்த நிலையில், சின்னாளபட்டியில் விஜய் கட்சி நிர்வாகிகள் மக்களுக்கு இலவச டீ டோக்கன் வழங்கி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளார்கள். தற்போது இது தொடர்பான தகவல்கள் வைரலாகி வருகின்றது.

அதன்படி விஜயின் கட்சி மாநாட்டுக்கு மக்களின் ஆதரவை சேர்க்கும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  பாதசாரிகள், வாகனங்களில் செல்வோர், கடைவீதி வணிக நிறுவனங்களின் ஊழியர் என அனைவருக்கும் கட்சி நிர்வாகிகள் டோக்கன் வழங்கி உள்ளார்கள்.

Advertisement

Advertisement