• Jan 19 2025

இரண்டாவது மகளின் முக்கிய விழாவைக் கொண்டாடிய திவ்யா ஸ்ரீதர்- வைரலாகும் எமோஷனல் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

கேளடி கண்மணி, மகராசி ஆகிய சீரியல்களில் நடித்தவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் நடித்து வருகிறார். கேளடி கண்மணி சீரியலில் நடித்த போது அந்த சீரியலில் நடித்த அர்னவுடன் நடிகை திவ்யா ஸ்ரீதருக்கு காதல் மலர்ந்தது.

இதையடுத்து கடந்த ஆண்டு இந்து மற்றும் இஸ்லாமிய முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பிணியான தன்னை தனது கணவர் அடித்து துன்புறுத்துவதாக நடிகை திவ்யா ஸ்ரீதர் போலீஸில் புகார் அளித்தார். தொடர்ந்து இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் கூறி கொண்டனர்.


இதன் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்ட நடிகர் அர்னவ், சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை திவ்யா ஸ்ரீதருக்கு பெண் குழந்தை பிறந்தது. அத்தோடு அர்னவ்வைப் பிரிந்து திவ்யா இரண்டு குழந்தைகளுடன் தனித்து வாழ்ந்து வருகின்றார்.

இந்த நிலையில் தற்பொழுது ஸ்ரீதர் தன்னுடைய இரண்டாவது மகளுக்கு பிரபல கோயில் ஒன்றில் வைத்து உணவு ஊட்டும் விழாவை நடத்தியுள்ளார்.இது குறித்த வீடியோவை தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement