சமீபத்தில் வெளியான "டூரிஸ்ட் பேமிலி" திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் அந்த வெற்றியை நேரில் பாராட்டியுள்ளார் நடிகர் சூர்யா. இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் அவர்களை நேரில் அழைத்து "டூரிஸ்ட் பேமிலி" படம் பிடித்தது, மிகவும் ரசித்தேன் என உற்சாகமாக கூறியிருக்கிறார்.
இந்த சந்திப்பில் ஏற்பட்ட சந்தோஷத்தை பகிர்ந்த இயக்குநர் தனது சமூக வலைதளத்தில் "சூர்யா சார் என் பெயரை அழைத்து படம் பிடித்தது என நேரில் கூறினார். எனக்குள் இருக்கும் ஒரு பையன் வாரணம் ஆயிரம் படத்தை 100 முறை பார்ப்பவன். இன்று அவன் நன்றியுடன் கண்ணீர் விடுகிறான்" என உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார்.
இந்த நிகழ்வு தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. பிரபல நடிகர் ஒருவரின் நேரடி பாராட்டு புதிய இயக்குநர்களுக்கு மிகப்பெரிய உற்சாகம் என்பதில் எளிதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மேலும் ரஜினிகாந்த் ,சிவகார்த்திகேயன், ராஜமௌலி நேரில் அழைத்து பாராட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!