• Nov 05 2024

தமிழன் என்ற அடையாளத்தை விரும்பிய முகுந்த்..உண்மையை கூறிய இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி..

Mathumitha / 11 hours ago

Advertisement

Listen News!

வெளியாகிய 4 நாட்களில் வசூலில் பட்டையை கிளப்பும் அமரன் திரைப்படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.இத்திரைப்படத்தினை சோனி பிக்சர்ஸ் மற்றும் நடிகர் கமலகாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனமும் சேர்ந்து தயாரித்துள்ளது.


மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்கள் சென்னையை அடுத்த தாம்பரம் நகரில் 1983ம் ஆண்டு ஏப்ரல் 12, அன்று ஒரு தமிழ் குடும்பத்தில் ஆர்.வரதராஜன் மற்றும் கீதாவுக்கு மகனாகப் பிறந்தார். இவரது தாத்தா இராகவாச்சாரி மற்றும் இவரது இரண்டு மாமாக்களும் இராணுவத்தில் பணியாற்றினர்.இது முகுந்த் வரதராஜனைப் இராணுவத்தில் சேரத் தூண்டியது.


தற்போது இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றுள்ளது குறித்த நிகழ்வில் இப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அவர்கள் “மேஜர் முகுந்த் வரதராஜன் தன்னை ஒரு  இந்தியர் என சொல்லிக்கவே ஆசைப்படுவார் தனது சான்றிதழில் கூட எந்த குறியீடும் இருக்ககூடாது என்று நினைப்பார். எனவே அவருக்கு 'இந்தியன்', 'தமிழன்' என்ற அடையாளத்தை மட்டுமே இந்த படத்தில் கொடுங்கள் என அவரின் குடும்பத்தார் என்னிடம் கேட்டுக்கொண்டனர்” என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement