இயக்குநர் பா.ரஞ்சித் நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ள திரைப்படம் 'பாட்டல் ராதா" இந்த படத்தை பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனர் தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெறாது. இதில் கலந்து கொண்ட பா. ரஞ்சித் தனக்கு தற்கொலை செய்து கொள்ளும் என்னம் வந்ததாக மேடையில் கூறியுள்ளார். இந்த விடயம் தற்போது வைரலாகி வருகிறது.
மதுப்பழக்கத்தால் வழிமாறி போகும் நாயகனின் கதையாக 'பாட்டல் ராதா' படம் உருவாகியுள்ளது. இப்படம் வரும் 24 ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் இயக்குநர்கள் அமீர், வெற்றி மாறன், மிஷ்கின், லிங்குசாமி, பா. ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந் நிகழ்வில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித் இவ்வாறு கூறினார்.
அவர் கூறுகையில் " நாங்கள் எல்லாரும் ஒன்றாகத்தான் சினிமாவுக்கு வந்தோம். முதலில் நான் இயக்குநராகிவிட்டேன். தினகரனையும் ஜெயக்குமாரையும் அனிமேஷன் இயக்குநர்களாக மாறச்சொன்னேன். ஆனால், அவர்கள் சினிமா இயக்குநராக மாறிவிட்டனர். எனக்கு சின்ன வயதில் நான் 12-வது படிக்கும்போது தற்கொலை செய்யலாம் அப்டினு நினைத்தேன். காரணம் என் அப்பா பெரிய குடிப்பழக்கத்தில் இருந்தார். அதனால், என் அம்மா மிகக் கஷ்டப்பட்டார். இதைப்பார்த்து என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் அப்படி முடிவெடுத்தேன்" என்று கூறினார்.
மேலும் "என் அப்பா மிக நல்லவர் எங்களுக்காக அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்தார். ஆனால், குடியால் கிட்னி செயலிழந்து உயிரிழந்தார். பாட்டல் ராதா கதையைப் படிக்கும்போது பல இடங்களில் உணர்பூர்வமாக இருந்தது. குடி ஒரு நோய் என்பது புரியவே நீண்ட நாள்கள் ஆகிவிட்டது. இந்தப் படம் ரசிகர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன்" என்று உருக்கமாக கூறியுள்ளார்.
Listen News!