• Jan 19 2025

இந்தியன் 2 கதை பிடிக்கவில்லை..? ரசம், பாயாசத்தை வைத்து விளக்கம் கூறிய கமல்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் எதிர்வரும் ஜூலை 12ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. அதற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தியன் 2 படத்திற்கான பிரமோஷன் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் துபாய் உள்ளிட்ட நாடுகளில் நடந்து வருகின்றது. இதன் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு படக்குழுவினர் பதில் அளித்து வருகின்றார்கள்.

இந்த நிலையில், இந்தியன் 2 படம் எனக்கு பிடிக்கவில்லை என்று சர்ச்சை உருவான நிலையில், அதற்கு தற்போது பதில் அளித்துள்ளார் கமல்ஹாசன்.

அதாவது இந்தியன் 2 படம் குறித்து சில நாட்களுக்கு முன் பேசிய கமல்ஹாசன், இந்தியன் 3 திரைப்படத்தின் கதை ரொம்பவும் பிடித்ததாகவும் அதனால் தான் இந்தியன் இரண்டாவது படத்தில் நடிக்க சம்மதித்ததாகவும் தெரிவித்திருந்தார். இவர் இவ்வாறு கூறியது, இந்தியன் 2 படத்தின் கதை நன்றாக இல்லை. அதனால் கமலுக்கு இந்த கதை பிடிக்கவில்லை என்றும் விருப்பமில்லாமல் தான் அவர் இந்த படத்தில் நடித்ததாகவும் சமூக வலைத்தளத்தில் வதந்திகள் பரவின.


இது தொடர்பில் தற்போது விளக்கம் அளித்து கமல் கூறுகையில், கடந்த ஆறு ஆண்டுகளாக எந்த பிரச்சனையும் இல்லாமல் ஒரு இயக்குனருடன் வேலை பார்த்து வந்தேன். ஒரே ஒரு பிரஸ்மீட்ல டைரக்டர் எனக்கு கால் செய்து என்ன சார் இப்படி பேசிட்டீங்க? என்று சொல்லும்படி ஆகிவிட்டது.

ஒரு குழந்தையிடம் உனக்கு அம்மா பிடிக்குமா? அப்பா பிடிக்குமா? என்று கேள்வி கேட்டால், அவர்கள் இரண்டு பேருமே இல்லை என்றால் குழந்தையை கிடையாது. அதேபோலத்தான் இந்த ஒரு சீன் எனக்கு பிடித்திருக்கிறது என்று நான் சொன்னால் எனக்கு மற்ற சீன் பிடிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை.

என்னுடைய நண்பர்களும் திரை விமர்சகர்களும் இதை அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது. எனக்கு இந்தியன் 3 திரைப்படம் ஒன்று இருப்பது தெரிந்து விட்டது. அதனால் தான் நான் அதன் மேல் ஆர்வமாக உள்ளேன். முதலில் சாப்பிட்ட சாம்பார் நன்றாக இருந்தது. பிறகு சாப்பிட்ட ரசமும் நன்றாகத் தான் இருந்தது. அதற்கு பிறகு வரும் பாயாசம் பற்றி நான் ஜோசித்தேன்  என்றால் அதற்காக என் நீங்கள் கோபிக்க கூடாது என்று கமல் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement