• Apr 14 2026

'ராயன்' ஆடியோ லாஞ்ச்சுக்கு மாஸ் என்ட்ரி கொடுத்த தனுஷ், எஸ்.ஜே சூர்யா! சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகராகவும், பவர் பாண்டி என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்து தற்போது வெற்றி படங்களை கொடுத்து வருபவர் தான் நடிகர் தனுஷ்.

தனுஷ் தற்போது தனது 50வது திரைப்படமான ராயன் படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். இதில் தனுஷ் உடன் எஸ்.ஜே சூர்யா காளிதாஸ், நித்யா மேனன், துஷாரா விஜயன், ஜெயராம், சந்திப் கிஷன், அபர்ணா முதலாளி என பல்வேறு பிரபலங்களும் நடித்துள்ளார்கள்.

கேங்ஸ்டர் பாணியில் உருவாகியுள்ள ராயன் திரைப்படம் எதிர்வரும் ஜூலை 26 ஆம் தேதி வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.


இந்த நிலையில், ராயன் படத்திற்கான ஆடியோ லாஞ்ன்ச் விழா சிறப்பாக நடைபெற்று உள்ளது. இதில் நடிகர் தனுஷ் மற்றும் எஸ். ஜே. சூர்யா ஆகியோர் மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார்கள்.


அதுமட்டுமின்றி தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜுனா இந்த ஆடியோ லாஞ்சிக்கு சிறப்பு விருந்தினராக வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement