• Jul 22 2026

குக் வித் கோமாளி 5 இல் களமிறங்கும் புதிய கோமாளி இவரா? ஆனாலும் பழைய பிரபலம் தான்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள், நிகழ்ச்சிகள் என்பவற்றுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளன. அந்த ஷோக்களில் ஒன்றுதான் குக் வித் கோமாளி.

இந்த நிகழ்ச்சி சமையல் பிளஸ் கலாட்டா என்ற கான்செப்டில் ஒளிபரப்பாகி வருவதோடு, தற்போது இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது.

குக் வித் கோமாளியின் ஐந்தாவது சீசனில் புதிய போட்டியாளர்கள், நடுவர்கள் என நிறைய புது விஷயங்களோடு புதிய பிரபலங்களும் களம் இறங்கியுள்ளார்கள்.


இந்த நிலையில், குக் வித் கோமாளியின் ஐந்தாவது சீசனில் புதிய கோமாளி களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி இந்த நிகழ்ச்சியில் புதிய கோமாளியாக அசார் களம் இறங்கி உள்ளாராம். இந்த தகவல்கள் வெளியாகி அவருக்கு தற்போது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement