• Feb 22 2024

இரு வீட்டாருக்கும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்த பாக்கியா? கதிரின் உயிரை எடுக்க அருவா எடுத்த சக்திவேல்? பரபரப்பின் உச்ச சம்பவம்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் மகா சங்கம் தொடரில் இன்று என்ன நடைபெற போகிறது என பார்ப்போம்.

ராஜியை இன்னும் காணவில்லையே என வடிவு வீட்டார்  புலம்பிக் கொண்டிருக்க, எல்லா விஷயமும் என்கிட்ட சொல்லுவாள்.. இத கூட சொல்லிருந்தா நானே கல்யாணம் பண்ணி வச்சிருப்பேன்.. லெட்டர் சரி எழுதி வச்சுட்டு போயிருந்தால் கூட கொஞ்சம் நிம்மதியா இருந்திருக்கும் என்று சொல்லி ராஜியின் சித்தியும் புலம்புகிறார்.

மறுபக்கம் இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கோமதி, ராஜியும் கதிரும் கல்யாண கோலத்தில் வந்தா என்ன நடக்குமோ  தெரியல.. முருகா நீ தான் துணை இருக்கணும் என மனதுக்குள் வேண்டிக் கொள்கிறார்.

இன்னொரு பக்கம் ராதிகா, கோபி, இனியா ஆகியோர்  ஊருக்கு திரும்ப வீட்டில் உள்ள உறவினர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்போது அப்பத்தாவிடம் சொல்லிவிட்டு கிளம்ப, எதிர் வீட்டில் செந்தில், பாண்டியனும் வீட்டுக்கு வந்து உச்சக்கட்ட பதட்டத்தில் காணப்படுகிறார்கள்.


அந்த நேரத்தில் அங்கு கார் ஒன்று வந்து நிற்க, அதிலிருந்து பாக்கியா இறங்குகிறார். அதை பார்த்த இனியா, அம்மா.. என்று ஓடிச்சென்று என்ன அம்மா இங்க நீ? இங்க கல்யாணம் நடக்கல.. ராஜிய ஓடிப்போயிட்டா.. என எல்லா விஷயத்தையும் இனியா  பாக்கியாவிடம் சொல்கிறார்.

இதையடுத்து ராஜி காரில் இருந்து இறங்க எல்லாரும் பார்த்து ஷாக் ஆகிறார்கள். அதிலும் அவர் தாலியுடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். நீ யார கல்யாணம் பண்ணினாய் என்று வடிவும் சரமாரியாக அடித்து விடுகிறார்.

அத்துடன் சக்திவேலின் மகன், யார் நீ? வெளிய வா என்று சத்தமிட,  கொஞ்சம் பொறுமையாக இருங்க நானே கூட்டிட்டு வாரேன்னு, கதிரை எழில் கூட்டி வர எல்லாரும் பேரதிர்ச்சி அடைகிறார்கள்.

இதைத்தொடர்ந்து ராஜிய  இவன்தான் ஏமாற்றி கூட்டி போய் இருப்பான் என்று கதிருடன் சண்டைக்கு செல்ல, இடையில் தடுத்த  பாக்கியா, கொஞ்சம் பொறுங்க.. உங்களுக்கு என்ன விஷயம் நடந்தது என்று தெரியணும் தானே என சத்தமிட்டு சமாதானம் செய்கிறார்.

இதன்போது,  திருச்செந்தூரில் கோமதி, மீனா, கதிரை பார்த்தனான். அவங்க எனக்கு சமையல் விசயத்துல ஹெல்ப் பண்ணாங்க.. கடைசியா அவங்க காலையில கிளம்பிட்டாங்க..

அதற்கு பிறகு நாங்க கிளம்பும் போது தான் கதிரையும் இந்த பொண்ணையும் பார்த்தேன். இந்த பொண்ணுக்கு கல்யாணம் பிடிக்காம வந்திருந்ததால ரெண்டு பேரும் காதலிப்பதாக சொன்னாங்க.. அதை தொடர்ந்து கோமதி பிள்ள என்பதால நான் அவங்களுக்கு கல்யாணம் செய்து வைத்தேன்.

எனினும் அதனை நம்ப மறுத்து ராஜி வீட்டார், கதிர் தான் அவளை கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணி இருப்பான் என்று கதிரை அடிக்க முனைய ,செந்தில், சரவணன் ஆகியோர் கதிரை காப்பாற்ற ஓடி வருகிறார்கள்.

இவ்வாறு இரண்டு குடும்பத்திற்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட  இதையெல்லாம் பார்த்து பாண்டியன் அதிர்ச்சியில் இருக்கிறார். மேலும்,  என்னடி இந்த டிராமாவுக்கு நீயும் உடந்தையா? என  கோமதியிடம் கேட்க, ஏதும் தெரியாதது போல் கோமதி நிற்கிறார்.

இது எல்லாமே பிளான் பண்ணி தான் செஞ்சிருக்காங்க என்று அனைத்து பலியும் பாண்டியன் மீது விழுகிறது. எனினும் என் குடும்பத்திற்கும் என் அப்பாவுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கதிர் சொல்கிறார்.

அப்படின்னா நீ தான் எல்லாத்தையும் பண்ணி இருக்கியா? உன்ன  உயிரோட விடமாட்டேன்னு சக்திவேல் வீட்டுக்கு போய் அருவா எடுத்து வர செல்கிறார். இத்துடன் இன்றைய மகா சங்கமம்  எபிசோடு முடிவடைகிறது.

Advertisement

Advertisement

Advertisement