• Jan 19 2025

டான்சிங் ரோஸ் நடிக்கும் 'பர்த் மார்க்' படத்தின் அடுத்த பாடல் ரிலீஸ்! செண்டிமெண்ட் காதலனா ஷபீர்?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் தான் ஷபீர்.

இந்த படத்தில் டான்சிங் ரோஸ் என்ற கதாபாத்திரத்தின் மூலம் அவரது நடிப்பும் அவரது அசைவும் மக்கள் மத்தியில் சிறப்பாக சென்று, நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

இந்தப் படத்தை தொடர்ந்து த்ரிஷா நடித்த ரோடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படமும் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.

இதைத்தொடர்ந்து ஷபீர் நடிப்பில் உருவாகும் புதிய படம் தான் பர்த் மார்க். இயக்குநர் விக்ரம் ஸ்ரீ ரன் இப்படத்தை இயக்கி எழுதியுள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக மிர்னா நடிக்கிறார். இவர் ஜெயிலர் படத்தில் வசந்த் ரவிக்கு மனைவியாக நடித்திருந்தார்.


இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசை அமைக்க, உதய்  தங்கவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மிஸ்டரி டிராமாவாக இந்த திரைப்படத்தின் கதை அமைந்துள்ளதோடு,   90களில் நடக்கும் கதைகளத்தை மையமாகக் கொண்டுள்ளது.

மேலும் இந்த படத்தில் பெண்கள் அனுபவிக்கும் மன ரீதியான  மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகளை உணர்வுபூர்வமாக  காட்டுவதாகவும் அதன் இயக்குனர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், டான்சிங் ரோஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் பர்த் மார்க்கின் திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடல் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது.

இதை வேளை, இந்த திரைப்படத்தின் பணிகள் நிறைவடைந்த நிலையில், அதன் பின்னணி வேலைகள் மட்டும் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement