• Apr 17 2026

விசித்ராவின் கணவர் மாயாவை எச்சரித்தாரா? பிக் பாஸில் நடந்த பஞ்சாயத்து...

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. பிரதீப் ஆண்டனி வீட்டை விட்டு சென்ற பிறகு விசித்ராவுக்கு கொஞ்சம் ரசிகர்கள்கூட்டம் அதிகமானது.

பிக் பாஸ் வீட்டில் அவருடைய கருத்துக்களும், தனக்கு எதிராக செயல்படும் ஹவுஸ்மெட்ஸை அவர் டீல் செய்யும் விதமும் ரசிக்ர்களை கவர்ந்துள்ளது.

இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டிற்கு வந்த விசித்ராவின் கணவர், மாயாவின் மூக்குடைத்ததாக பரபரப்பாக பேசப்படுகிறது. 


அதன்படி, பிக் பாஸ் வீட்டுக்கு வந்த விசித்ராவின் கணவர், நான் இங்க ஜாலியா இருக்கத்தான் வந்திருக்கேன் என சொல்லி, அனைவருடனும் சகஜமாக கதைத்து பேசியுள்ளார். 

மேலும், அர்ச்சனாவிடம், நீங்க ரொம்ப நல்லா டான்ஸ் ஆடினீங்க, உங்க பெர்போமன்ஸ் எல்லாம் சூப்பர் என சொல்லி இருந்தார்.

அத்துடன், என்னுடைய எனிமி ஸ்மால் பாஸிடம் நான் பேசணும் என்று கலகலப்பாக பேசியிருந்தார். 


அதே போல விசித்ராவின் மகனும், எல்லோரும் உங்களை மம்மின்னு கூப்பிடும் போது எனக்கு ஜலீஸாக இருக்கு என்று சொல்லி இருந்தார்.

இவ்வாறான நிலையில்,விசித்ராவின் கணவரிடம் பேசிய மாயா,  நான் ஏதாவது தப்பு பண்ணி இருந்தா என்னை மன்னிச்சிருங்க என்று மன்னிப்பு கேட்க, அதற்கு விசித்ராவின் கணவர் அதான் நானும் பார்த்தேன்... நீங்க அதிகமா மன்னிப்பு கேக்குறீங்க.. அன்னைக்கு கூட அர்ச்சனா அம்மா அப்பா காலில் சாஸ்டாங்கமா விழுந்துட்டீங்களே என்று கிண்டல் செய்திருந்தார். 

Advertisement

Advertisement