• Jan 19 2025

ரச்சிதாக்கு புளியோதரை ரொம்ப பிடிக்கும்.! சொல்லும் போதே கலங்கி அழுத தினேஷின் அம்மா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 தற்போது தான் கலகலப்பாக இருக்கும் வகையில், பிக் பாஸ் போட்டியாளர்கள் தமது குடும்பத்துடன் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.

இது வரை நடைபெற்ற பிக் பாஸ் சீசன்களை விட இம்முறை முற்றிலும் வித்தியாசமாக இரண்டு வீடுகள் மற்றும் புதிய விதிமுறை என வித்தியாசமாக ஆரம்பிக்கப்பட்டது.

அதேபோல, இந்த முறை சீசனில் தான் அதிக வைல்ட் கார்ட் என்ட்ரிகளும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தனர். அதன்படி வந்த ஐவரில் தற்போது தினேஷ் மற்றும் அர்ச்சனா ஆகிய இருவரும் தான் தமது ஆட்டத்தை சிறப்பாக விளையாடி வருகின்றனர்.


பிக் பாஸ் ஆரம்பிக்கப்பட்டு பாதி நாட்களில் இவர்கள் உள்ளே வந்து இருந்தாலும், அவர்கள் இருவருக்கும் மக்கள் மத்தியில் விரைவாகவே அமோக வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில், பிக் பாஸ் தினேஷ் பற்றியும் ரச்சிதா பற்றியும் தினேஷின் அம்மா, அப்பா மேலும் சில சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளனர்.


அதன்படி மேலும் அவர் கூறுகையில், தினேஷுக்கு மொத்தமாக 40 ஏக்கர் அளவில் காணியிருக்கு. அவர் கொரோனா நேரத்தில் இங்கு வந்து தான் உழுது, வேலைசெய்து ஒருவாரம் இங்கையே தங்கி இருந்தாங்க...


இங்க தான் நாச்சியார்புரம் படப்பிடிப்பும் நடந்தது. இறுதி படப்பிடிப்பின் போது  எல்லாருக்கும் பிரியாணி கூட சமைத்து கொடுத்தார்.

மேலும், ரச்சிதாக்கு  புளியோதரை ரொம்ப பிடிக்கும். அவங்களுக்கு பிடிக்கும் என்றே விரும்பி செய்வன். அவங்க வேல பாக்கிறவங்களுக்கும் சேர்த்து சமைச்சி குடுப்பன்.. அவ்வளவு பிடிக்கும் அவங்கள.. இப்ப கூட யாரும் புளியோதரை கொண்டு வந்து தந்தா சாப்பிட மாட்டன் என சொல்லி கண் கலங்கி அழுதார் தினேஷின் அம்மா.


Advertisement

Advertisement