• Jul 27 2024

பொங்கல் ரேஸில் வெற்றி பெற்றாரா சிவகார்த்திகேயன்? இதுவரையிலான மொத்த கலெக்சன் எவ்வளவு தெரியுமா?

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ள திரைப்படம் தான் அயலான். 

ஏலியனை மையமாக வைத்து உருவாகி இருக்கும் சையின்ஸ் பிக்சன் திரைப்படமான இதை ரவிக்குமார் இயக்கி உள்ளார்.

கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். 


இப்படத்திற்கு கூடுதல் பிளஸ் ஆக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார்.

இப்படத்தில் விஎப் எக்ஸ் காட்சிகள் மட்டும் 4 ஆயிரத்திற்கு மேல் உள்ளது. தமிழ் சினிமாவில் இத்தனை வி எப் எக்ஸ் காட்சிகளுடன் உருவாகி இருக்கும் முதல் திரைப்படம் இதுவாகும்.


இந்த நிலையில், அயலான் படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, அயலான் திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 82 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement