• Dec 29 2025

"ஜனநாயகன்" வெளியீட்டில் சிக்கல்.. என்னங்க இப்படி ஆகிடுச்சு..! சோகத்தில் ரசிகர்கள்

subiththira / 6 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்களுக்கிடையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாக்கப்பட்ட விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படம், தற்போது வெளியீட்டில் சிக்கல்களை சந்தித்து வருகிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகிய இந்த திரைப்படம், விஜய்யின் திரைப்பட வாழ்க்கையில் முக்கியமான இடத்தை வகிக்கும் இறுதி படம்  என்பதால், ரசிகர்கள் அனைவரும் அதனை கவனத்துடன் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.


இந்நிலையில் தற்பொழுது வெளியான தகவல்களின் படி, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ‘ஜனநாயகன்’ படத்தை வெளியிடவிருந்த தயாரிப்பு நிறுவனம் திடீரென பின்வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, அந்த மாநிலங்களில் படத்திற்கு போதுமான தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

அதேபோல் ஹிந்தியிலும் இதுவரை பெரியளவில் ப்ரோமோஷன் செய்யாததால், அங்கேயும் மிக குறைவான தியேட்டர்களிலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 


இந்த சூழல், ‘ஜனநாயகன்’ படத்தின் வருமானத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சில வல்லுநர்கள் கூறுகின்றனர். இப்படம் ஜனவரி 9ம் தேதி வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement