• Sep 14 2024

தனுஷ் மகன் யாத்ராவா இப்படி செய்தார்? தனுஷ் மகனாச்சே ஒன்னோட நிறுத்துவாரா?

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் தன் அக்கா மகனை ஹீரோவாக வைத்து இயக்கி வரும் படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் . அந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் ப்ரியங்கா மோகன் டான்ஸ் ஆடியிருக்கும் Golden Sparrow பாடல் விரைவில் வெளியாகும் என சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் இயக்குநர் தனுஷ்.


கோல்டன் ஸ்பாரோ பாடல் அறிவிப்பு போஸ்டரில் மடிசார் கட்டி, காலில் ஷூ, கண்ணில் கூலிங் கிளாஸ் என கூலான மாமியாக போஸ் கொடுத்திருக்கிறார் ப்ரியங்கா மோகன். அவர் நண்பர் தனுஷுக்காக இந்த படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியிருக்கிறார்.கோல்டன் ஸ்பாரோ குறித்த தனுஷின் ட்வீட்டை பார்த்த எஸ்.ஜே. சூர்யா எக்ஸ் தளத்தில் கூறியதாவது,


தனுஷ் சாருடன் சேர்ந்து அந்த பாடலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அழகான ப்ரியங்கா மோகன் க்யூட்டாக இருக்கும் பாடல். ப்ரியங்கா மோகன் அந்த பாடலில் சூப்பராக டான்ஸ் ஆடியிருக்கிறார். பாடலை எழுதியது தனுஷ் சார் மகன் யாத்ரா என்றார்.


எஸ்.ஜே. சூர்யாவின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள், யாத்ரா தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இந்நிலையில் எஸ்.ஜே. சூர்யாவின் ட்வீட்டை பார்த்த தனுஷின் வுண்டர்பார் நிறுவன சி.இ.ஓ. ஸ்ரோயாஸ் கூறியிருப்பதாவது, சார், அறிவு தான் அந்த பாடலை எழுதியிருக்கிறார். யாத்ரா நான்கு வரிகள் மட்டுமே எழுதியிருக்கிறார். உங்களின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. ஆகஸ்ட் 30ம் தேதி முதல் கோல்டன் ஸ்பாரோ என தெரிவித்தார்.



  

Advertisement

Advertisement