• Sep 14 2024

சூரி ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்! விடுதலை 2 ரிலீஸ் அறிவிப்பு!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் விடுதலை, இதில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.


கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி ரிலீஸ் ஆன இப்படத்திற்காக கிட்டத்தட்ட 2 முதல் 3 ஆண்டுகள் உழைத்துள்ளார். இதனால் மற்ற படங்களில் நடிக்காமல் முழுக்க முழுக்க விடுதலை படத்தில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளார்.


விடுதலை படத்தின் இரண்டாம் பகுதி டிசம்பர் மாதம் கடைசியில் வெளிவர உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படத்தின் கடைசி படப்பிடிப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து விடுதலை படத்தின் இரண்டாம் பகுதி திரையரங்குகளில் வெளிவந்த பிறகு தான் வெற்றிமாறன்,சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. 

Advertisement

Advertisement