• Feb 12 2026

மீண்டும் அட்லீ குடும்பத்தில் கொண்டாட்டம்.. பிரியா வெளியிட்ட அறிவிப்பால் குஷியில் ரசிகர்கள்

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

பிரபல இந்திய திரைப்பட இயக்குநர் அட்லீ, மீண்டும் ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை தருணத்தை நோக்கி பயணிக்கிறார். அட்லீ இரண்டாவது முறையாக அப்பாவாகப் போகிறார் என்ற இனிய செய்தி தற்போது திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த மகிழ்ச்சியான செய்தியை அட்லீயின் மனைவி பிரியா தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அட்லீயுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை பகிர்ந்த பிரியா, தங்கள் இரண்டாவது கர்ப்பத்தை உற்சாகமாக வெளிப்படுத்தியுள்ளார்.

பிரியா பகிர்ந்த பதிவில், அட்லீ மற்றும் குடும்பத்தினருடன் நடந்த சமீபத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. அந்த புகைப்படங்களில் அட்லீ – பிரியா தம்பதியினர் மகிழ்ச்சியுடன் தோன்றியிருந்தனர். சிறிய குடும்பத்துடன் இணைந்து எடுத்த இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை உடனே ஈர்த்தது.


இந்த புகைப்படத்துடன் சேர்த்து, “Our home is about to get even cozier with the addition of our newest member! Yes! We are pregnant again…Need all your blessings, love and prayers. With love – Atlee, Priya, Meer, Becky, Yuki, Chocki, Coffee and Goofy.” என்ற பதிவினையும் வெளியிட்டுள்ளனர்.

 

Advertisement

Advertisement