• Jul 27 2024

தனுஷ் எப்பவும் தலைவர் ரசிகர் தான்.. ‘லால் சலாம்’ ரிலீஸ் தினத்தில் வாழ்த்து..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘லால் சலாம்’ திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இந்த படம் இன்று முதல் வெளியாகிறது என தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ‘லால் சலாம்’ ட்ரெய்லர் வெளியான தினத்தில் அந்த டிரைலரை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த தனுஷ், படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்கள் என்றும் சூப்பர் ஸ்டார், தலைவர் போன்ற ஹேஷ்டேக்குகளையும் பதிவு செய்திருந்தார்

இந்த நிலையில் இப்போது ‘லால் சலாம்’ திரைப்படம் இன்று முதல் வெளியாகிறது என தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் ரஜினிகாந்த் தனது மகளுக்கு வாழ்த்து கூறிய போஸ்டையும் ரீபோஸ்ட் செய்துள்ளார். எனவே தனுஷ் தனது மனைவியை பிரிந்தாலும் என்றும் அவர் தலைவர் ரசிகர் தான் என்பதை இந்த பதிவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.



தற்போது கூட அவர் எந்த மேடையில் ஏறினாலும்  ரஜினிகாந்த் தனது தலைவர் என்று கூறுவார் என்பதும் ரஜினியின் படங்கள் ஆகும்போது முதல் நாள் முதல் காட்சியை திரையரங்குகளில் சென்று பார்த்து வருகிறார் என்பது தெரிந்தது.

இருப்பினும் ஐஸ்வர்யா மீது அவருக்கு இருந்த கோபம் இன்னும் தீரவில்லை என்பது அவரது பதிவுகளில் இருந்து தெரிய வருகிறது. ‘லால் சலாம்’ குறித்த எந்த பதிவிலும் அவர் ஐஸ்வர்யாவின் பெயரையோ, சமூக வலைதள ஐடியையோ அவர் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement