• Sep 10 2024

டிமான்டி காலனி 2 திரைப்படத்தில் டெலிட் செய்யப்பட்ட காட்சி ரிலீஸானது! வீடியோ இதோ...

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி சினிமா பாணியை உருவாக்கிக் கொண்ட இயக்குனர்களுள் அஜய் ஞானமுத்துவும் ஒருவராக காணப்படுகின்றார். கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் ஆன படங்களில் அதிக எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் தான் டிமான்டி காலனி 2.

இந்த திரைப்படத்தில் அருள் நிதியுடன் அருண் பாண்டியன், பிரியா பவானி சங்கர், பிக் பாஸ் அர்ச்சனா உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் முதலாவது பாகம் 2015 ஆம் ஆண்டு வெளியான நிலையில், தற்போது இரண்டாவது பாகம் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் கழித்து வெளியாகி உள்ளது.

இதன் முதலாவது பாகத்தில் அனைவருமே இறந்து விடுவார்கள் என்பதால் இரண்டாவது பாகத்தில் எங்கிருந்து படத்தை ஆரம்பிக்கப் போகின்றார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்தது. டெய்லரில் அருள் நிதியை உயிருடன் பார்த்ததும் ரசிகர்களின் ஆர்வம் இன்னும் அதிகரித்தது.


அதேபோல படத்தை பார்த்த ரசிகர்களும் இதுவரை எந்தவிதமான குறையும் சொல்லாமல் தமது பாராட்டை கொடுத்து வருகின்றார்கள். இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அண்மையில் டிமாண்டி காலனி 2 திரைப்படத்தின் படக் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியும் இருந்தார்கள்.

இந்த நிலையில், டிமான்டி காலனி 2 திரைப்படத்தில் இருந்து டெலிட் செய்யப்பட்ட காட்சி தற்போது வெளியாகி உள்ளது. அதில் பிக் பாஸ் அர்ச்சனா மற்றும் அருள்நிதி உடன் போனில் உரையாடும் காட்சி காட்டப்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ,


Advertisement

Advertisement