• Nov 22 2024

தேசிய விருதில் வேண்டுமென்றே தான் நிராகரித்தார்கள்..? பா. ரஞ்சித் ஆதங்கம்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

கல்லூரியில் படிக்கும் போதே சினிமாவின் மீது இருந்த ஆசையால் இயக்குனர் லிங்குசாமி, வெங்கட் பிரபு ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர் தான் பா. ரஞ்சித். அதன்பிறகு 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார்.

தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இவர், அதன் பின்பு மெட்ராஸ் படத்தை இயக்கினார். முதல் இரண்டு படங்களும் ஹிட்டான நிலையில் ரஜினியை வைத்து இயக்கும் வாய்ப்பு பா. ரஞ்சித்திற்கு கிடைத்தது. அவ்வாறு அவர் இயக்கிய கபாலி படமும் மிகப்பெரிய ஹிட் ஆனது. அதன் பின்பு காலா படத்தை இயக்கினார். இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதும் வசூலில் சுமாரான வெற்றி பெற்றது.

2021 ஆம் ஆண்டு ஆர்யாவை வைத்து பா. ரஞ்சித் இயக்கிய படம் தான் சார்பட்டா பரம்பரை. இந்த படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதன் பின்பு நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கினார். தற்போது விக்ரமை வைத்து தங்கலான் என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.


இந்த நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய பா. ரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக நாம் கொண்டாடுகின்றோம். ஆனால் அந்தப் படத்தின் இரண்டாம் பாதி சரியில்லை என்று பலரும் விமர்சனம் செய்தனர். விருது விழாக்களில் சார்பட்டா படம் வெளிப்படையாகவே நிராகரிக்கப்பட்டது. சார்பட்டா பரம்பரை கிரிட்க்ஸ் பிரிவில் பல விருதுகளை வென்றது. அப்படி வாங்கினால் தேசிய விருதும் நிச்சயம் கிடைக்கும். ஆனால் தேசிய விருது பட்டியலில் உள்ளே போக முடியவில்லை. இதற்கு இந்த படம் தகுதி இல்லாததா?

வேண்டுமென்றே தான் என் வேலையை மதிக்கக்கூடாது என சிலர்  திட்டமிட்டு செயல்படுகின்றனர். எனது கருத்தின் அடிப்படையில் அதை நிராகரிக்கின்றார்கள். இந்த வெறுப்பை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement