கடந்த 2022ம் ஆண்டு ஜனனி, ஈஸ்வரி, நந்தினி, ரேணுகா என்ற 4 பெண்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஒளிபரப்பான எதிர்நிச்சல் தொடர் ரசிகர்களின் பேராதரவை பெற்றது. டிஆர்பியில் டாப்பில் இருந்தது.
ஒரு குடும்பத்தில் நடக்கும் பிரச்சனை, ஆண் ஆதிக்கத்தால் பெண்களுக்கு ஏற்படும் தொல்லைகள், மனைவிகளை மதிக்காமல் இருக்கும் கணவன்கள், பெண்களின் தனிப்பட்ட ஆசைகளுக்கு மதிப்பு தெரிவிக்காமல் இருக்கும் ஆண்கள் என கதை பரபரப்பாக சென்று கொண்டிருந்தது.
இதில் முக்கியமாக குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்துவந்த மாரிமுத்து அவர்களின் இறப்பிற்கு பிறகு கதையில் கொஞ்சம் டல் அடித்தது அந்த இடத்துக்கு வேறு நடிகர் வரவே பரபரப்போடு நகர்ந்து முடிவடைந்தது.
தொடர் முடிந்த பிறகு அடுத்த சீசன் எப்போது என ரசிகர்கள் நிறைய கேள்வி எழுப்பி வர இப்போது அதற்கான பதில் வந்துள்ளது. விரைவில் எதிர்நீச்சல் சீரியல் 2வது சீசன் வரப்போகிறதாம். இது தொடர்பாக பலரும் சோசியல் மீடியாவில் அவ்வப்போது செய்திகள் கசிந்த நிலையில் தற்போது அதிகார பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர் நீச்சல் இயக்குனர் திருச்செல்வம் இதனை உறுதி படுத்தும் வகையில் "உங்கள் கேள்விகளுக்கு பதில் எழுதுகிறேன். எதிர் நீச்சல் தொடர்கிறது விரைவில்" என்று கூறியுள்ளார்.
Listen News!