நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அமரன் திரைப்படம் வெளியாகி இருந்தது. வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் இந்த திரைப்படம் வெற்றி பெற்றது. அதேசமயம் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடித்த வருகிறார்.
மேலும் சிப்பி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24 வது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். அத்தோடு இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்திலும் புதிய படம் ஒன்றில் கமிட்டாகியிருக்கிறார். இந்த படமானது சிவகார்த்திகேயனின் 25 வது படமாக உருவாக இருக்கிறது.
இந்த படத்திற்கு SK-25 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி வருகிறது. அது மட்டும் இல்லாமல் நடிகர் ஜெயம் ரவி இந்த படத்தில் வில்லனாக நடிக்கப் போகிறார் என்று சொல்லப்படுகிறது.
எனவே SK 25 படம் 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி திணிப்பை மையமாக வைத்து உருவாக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் 21-ம் தேதி சென்னையில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Listen News!