• Feb 21 2025

தல ரசிகர்களே தயாரா..! விடாமுயற்சி முதல் சாங் ரிலீஸ்..! அனிருத் கொடுத்த அதகள அப்டேட்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் அனிருத் ஒரு அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். 


பல நாட்களுக்கு பிறகு விடாமுயற்ச்சி டீசரை வெளியிட்டு காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தது.  இந்நிலையில் ஜனவரி 10ம் திகதி  பொங்கலுக்குத் இப்படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் இன்னும் ஒரு பாடல் காட்சி படமாகாமல் உள்ள நிலையில், அந்தப் பாடல் காட்சியை டிசம்பர் 13ம் திகதி படமாக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.


தொடர்ந்து விடாமுயற்சி படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் புகைப்படம் போட்ட டுவிட்டர் கணக்கு ஒன்றில் அனைவரும் காத்திருங்கள் இன்று மாலை 6:30 மணிக்கு விடாமுயற்சி படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளது என கூறி ஒரு புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளனர்  . இந்த நியூஸ் தல ரசிகர்களின் கண்ணில் படவே அபாரமாக ஷேர் செய்து வருகின்றனர். இதோ அந்த போஸ்ட்... 


Advertisement

Advertisement