இசை என்பது சில நேரங்களில், வார்த்தைகளால் சொல்ல முடியாத உணர்வுகளைக் கூறுகின்ற வகையில் அமைந்திருக்கும். அந்தவகையில் அண்மையில் நடந்த நிகழ்வொன்று தமிழ்த் திரைத்துறையிலும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
பிரபல மலையாளப் பாடகி வைகோம் விஜயலட்சுமி, சமீபத்தில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சியில் பாடிய பாடல் அந்நிகழ்வில் இருந்த அனைவரையும் உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அந்நிகழ்வில் கலந்து கொண்ட பல திரைப்பிரபலங்களின் கண்களில் இருந்து கண்ணீரும் வந்திருந்தது.
அதுமட்டுமல்லாமல், பிரபல நடிகர் மாதவன் வைகோம் விஜயலட்சுமியின் குரலால் ஈர்க்கப்பட்டு, "இதுவே இசையின் மாயம்" என்று உருக்கமாகக் கூறியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவர் பாடியிருந்த "கண்ணிலே ஈரம் உண்டு...." என்ற தமிழ்ப் பாடல் மிகவும் உணர்வுபூர்வமாக காணப்பட்டது.
அந்நிகழ்வில் அமர்ந்திருந்த நடிகை சமந்தா, வைகோம் விஜயலட்சுமி பாடும் போது மிகுந்த நெகிழ்ச்சியுடன் காணப்பட்டார். அவருடைய கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் வழிந்ததையும் அறியமுடிகின்றது. வைகோம் விஜயலட்சுமியின் குரலால் கண்ணீர் வழிந்தது என்பது வெறும் சம்பவமல்ல. அது இசை எப்படி ஒரு மனிதனின் உள்ளத்தைக் கவர்கின்றது என்பதை உணர்த்துகின்ற எடுத்துக்காட்டாகும்.
Listen News!