• Apr 02 2025

பிக்பாஸ் புகழ் ஜனனியா இது...! ரொம்பவே ஸ்டைலாவும் அழகாகவும் வந்துட்டாங்களே..!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒவ்வொரு வாரமும் தனது அமைதியான நடத்தை மற்றும் மழலைத் தனமான கதை என்பன மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர்  நடிகை ஜனனி.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு, சமூக வலைத்தளங்களில் தனது பயணத்தைப் பகிர்ந்து கொண்டு வரும் ஜனனி, தற்பொழுது சினிமா உலகத்தில் பிஸியாக வலம் வருகின்றார். அந்த வகையில், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட சாறி லுக் புகைப்படங்கள், இணையத்தை வைரலாக்கியுள்ளது.

புகைப்படங்கள் வெளியான சில நிமிடங்களிலேயே அதிகளவான கமெண்டுகளை ரசிகர்கள் போட்டுள்ளனர். மேலும் “பிக்பாஸ் வீட்டில்  இருந்த ஜனனியா இது? இப்படி அழகா இருக்காங்களே!” என ஜனனியைப் பாராட்டி வருகின்றனர்.

ஜனனியின் திரைப்பயணம் பிக்பாஸ் மூலம் பெரும் திருப்புமுனையைக் கண்டது. அந்த நிகழ்ச்சியின் வாயிலாக மக்கள் மனதில் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கி தற்பொழுது பல திரைப்படங்கள் மற்றும்  வெப் சீரிஸ்களில் முன்னணி நடிகையாக பிஸியாக உள்ளார் ஜனனி. அந்தவகையில் தற்பொழுது வெளியான புகைப்படங்களில் ஜனனி மிகவும் அழகாகவும் ஸ்டைலாகவும் காணப்படுகின்றார்.




Advertisement

Advertisement