• Jan 18 2025

ப்பா இந்த வயசுல இப்படி ஒரு Voice-ஆ , Singers தோத்துருவாங்க ! - குட்டிப் பொண்ணு மேக்னா யார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக அனைத்து சமூக வலைத்தளங்களிலும் சூப்பர் சிங்கராக வலம் வரும் பிரபலம் தான் மேக்னா சுமேஷ். இவ் யாரென்று பார்ப்போம் வாங்க.

நடிகர் தனுஷின் அதிகமான பாடல்களைப் பாடி வருபவர் தான் மேக்னா.அந்த வகையில் வாத்தி படத்தில் கூட ஒரு பாடலைப் பாடியுள்ளார். பாங்ளுரைச் சேர்ந்த இவர் மே 16ம் திகதி பிறந்திருக்கின்றார். இவர் தனது குடும்பத்துடன் கோவையில் இருந்து வருகின்றாராம்.


கோவையிலேயே கல்வி பயின்று வரும் இவருக்கு சிறு வயதியே பாடும் திறமை இருப்பதால் மலையாள த்தில் பிரபலமான பிளவர்ஸ் என்னும் சேனலில் இடம் பெற்ற பாடல் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டாராம்.

இந்த நிகழ்வுக்கு நடிகை மஞ்சு வாரியார் கெஸ்டாக வந்திருந்தபோது அசுரன் படத்தில் இடம் பெற்ற எல்லு வயல் பூக்கலையே பாடலைப் பாடி அசத்தியிருந்தாராம். இப்பாடல் இனைத்து சமூக வலைத்தளங்களிலும் கூட வைரலாகியது.

இது தவிர சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்குபற்றி டைட்டில் வின்னர் ஆன ரித்திக் இவருடைய குளோஷ் பிரண்டாம். மலையாளியான இவர் சிறப்பாக தமிழும் பேசுவாராம்.இவருக்கு வித்யாசாகர் தான் ரோல் மாடலாம்.அவருடைய பாடலைத் தான் அதிகமாகக் கேட்டு வருகின்றாராம்.

4

அந்த நிலையில் அவர் ஜி.வி பிரகாஷுடன் இணைந்து பணியாற்றியும் வருகின்றாராம். அத்தோடு ஷிவாங்கியின் அம்மாவிடம் முறையாக பாடல் கற்று வருகின்றாராம். எதிர்காலத்தில் இவர் நல்லதொரு பாடகியாக மட்டுமல்லாது நடிகையாகவும் வலம் வருவார் என்று நம்பப்படுகின்றது.

Advertisement

Advertisement