• Mar 18 2025

அமலா பால் பகிர்ந்த க்யூட் வெடிங்க் போட்டோஸ்.. எம்புட்டு அழகா இருங்காங்க..

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் சினிமாவில் தனக்கென மிகப்பெரிய இடத்தை பிடித்த நடிகை தான் அமலா பால். இவர் ஆரம்பத்தில் சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் படு விமர்சனத்திற்கு உள்ளது.

இதை தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். அதன்படி இவர் நடித்த திரைப்படங்களில் தலைவா, ஆடை, காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்கள் ரசிகர்களின் வரவேற்ப்பை பெற்ற படங்களாக காணப்படுகின்றன்.

சிறிய மாற்றத்துடன் ஓடிடியில் ரிலீஸாகும் கங்குவா..? ரசிகர்களிடம் பெருகும் ஆர்வம்

அதன்பின் இயக்குனர் ஏ.எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சிறப்பாக சென்ற இவர்களுடைய திருமண வாழ்க்கை நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. இருவரும் சட்ட ரீதியாகவே விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.


இதையடுத்து தனது கேரியரில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார் அமலா பால். எனினும் ஒரு கட்டத்தில் தனது நெருங்கிய நண்பரையே திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.

இந்த நிலையில், 2023ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நடிகை அமலா பால் தனது திருமண புகைப்படங்களை மீண்டும் நினைவூட்டும் வகையில் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். தற்போது குறித்த புகைப்படங்கள் வைரலாகி உள்ளன.

Advertisement

Advertisement