பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு பாதி நாட்களைக் கடந்து உள்ளது. ஆனாலும் இந்த சீசனில் யாரு சிறந்த போட்டியாளர்கள் என்பதை தெரிவு செய்ய முடியாத நிலையில் ரசிகர்கள் உள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனின் ஆரம்பத்தில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, தர்ஷா குப்தா, சத்யா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள்.
இதை தொடர்ந்து ஆறு போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவகுமார் ஆகிய ஆறு பேரும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்கள். இவர்கள் நுழைந்த பிறகு சரி ஆட்டம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு எதுவுமே நடைபெற இல்லை. இதன் காரணத்தினாலையே இந்த சீசனை சலிப்போடும் வெறுப்போடும் நோக்கி வருகிறார்கள்.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ரியா தியாகராஜன் இந்த சீசனை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி தொடர்பில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.
அதன்படி அவர் கூறுகையில், என்னைப் பொறுத்த வரைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஹோஸ்ட் ஆக களமிறங்கிய விஜய் சேதுபதி நல்லா தான் நிகழ்ச்சியை கொண்டு நடாத்தி வருகிறார்.
நான் அழுது கொண்டே வெளியேறும் போதும் ஐயோ இந்த பொண்ணு அழுதே என ரொம்ப ஸ்வீட்டா சாரி சொல்லி இருந்தார். அவருக்கு ஜென்றலாவே மனிதாபிமானம் அதிகம்.
அதிலும் ஸ்கூல் டாஸ்க் நடக்கும் போது அவர் எல்லாருடைய கருத்துக்களையும் கேட்டு தனது பாணியில் தெரிவித்த கருத்தும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது என விஜய் சேதுபதி தொடர்பில் தனது கருத்தை முன் வைத்துள்ளார் ரியா.
Listen News!