• Aug 29 2025

'கூலி' 5 நாட்களில் கலக்கத் தயாராகிறது...!ரஜினியின் ஸ்டைலிஷ் போஸ்டர் வெளியிட்ட படக்குழு!

Roshika / 2 weeks ago

Advertisement

Listen News!

ரஜினிகாந்த் ரசிகர்களுக்காக மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகியிருக்கும் ‘கூலி’ திரைப்படம், அதன் திரைவெளியீட்டுக்கு முன்னதாகவே மிகப்பெரிய பரபரப்பை உருவாக்கியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த மாஸ் திரைப்படம், ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.


வெளியீட்டுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், படக்குழு இன்று புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் ரஜினிகாந்த் மிகவும் ஸ்டைலிஷாகவும், அவருக்கே உரிய மாஸாக  காட்சியளிக்கிறார். தன்னிச்சையான மற்றும் கொஞ்சம் சூடான பார்வையுடன் வெளியிட்ட போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


படத்தின் மியூசிக் அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ளது. முந்தைய டீசர் மற்றும் சிங்கிள் பாடல்கள் அனைத்தும் யூடியூப்பில் மில்லியன்களைக் கடந்து வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement