• Apr 23 2025

’குக் வித் கோமாளி’ சீசன் 5 முதல் நாள் படப்பிடிப்பு.. இந்த 6 போட்டியாளர்கள் உறுதி..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் அதில் ஆறு போட்டியாளர்கள் கலந்து கொண்டதாக செய்திகள் கசிந்துள்ளன. 

விஜய் டிவியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் ஐந்தாவது சீசன் தொடங்குவதில் சில காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட் திடீரென இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகிய நிலையில் அதனை அடுத்து இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியோர்களும் விலகி விட்டனர்.

இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் செஃப் தாமு ஆகியோர் நடுவர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியில் சில கோமாளிகள் அறிவிக்கப்பட்டு அதற்கான ப்ரோமோ வீடியோக்கள் வெளியானது என்பதை பார்த்தோம். 

இந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஸ்டூடியோவில் இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு தொடங்கியதாகவும் செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் நடத்திய இந்த நிகழ்ச்சியை மணிமேகலை மற்றும் ரக்சன் தொகுத்து வழங்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் இந்த சீரியலில் நடிகை வடிவுக்கரசி, தொகுப்பாளினி பிரியங்கா, சீரியல் நடிகர் வசந்த், சமையல் கலைஞர் மெக்கன்சி, நடிகை திவ்யா துரைசாமி,  விடிவி கணேஷ் ஆகிய 6 போட்டியாளர்கள் பங்கேற்றதாகவும் அவர்களது காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் இந்த நிகழ்ச்சி தொடங்கும் தேதியை விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சீசனில் கலந்து கொண்ட மற்ற போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் யார் யார் என்பதை வரும் நாட்களில் பார்ப்போம்

Advertisement

Advertisement