• Jan 19 2025

விஜய் டிவி சீரியலில் கணவன் - மனைவி குளியல் காட்சி.. இதுக்குத்தான் சீரியலுக்கும் சென்சார் வேணும்ங்கிறது..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்றில் கணவன் மனைவி குளியல் காட்சி இருப்பதை அடுத்து தான் சீரியல்களுக்கும் சென்சார் வேண்டும் என்று பார்வையாளர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

 சமீபகாலமாக சீரியல்களில் குடும்பத்தோடு பார்க்க முடியாத அளவுக்கு எல்லை மீறும் காட்சிகள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக முதலிரவு காட்சிகள், முத்த காட்சிகள் ஆகிய காட்சிகள் இருப்பதாகவும் இளைஞர்கள் மற்றும் ஆண் பார்வையாளர்களை இழுக்கும்  வகையில் இந்த வசீகர காட்சிகளை களம் இறக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’ஆஹா கல்யாணம் சீரியலில் கணவனும் மனைவியும் ஒன்றாக பாத்ரூமில் ஷவரில் குளிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களில் இந்த காட்சிகளுக்கு கண்டனமும் கிண்டலும் செய்யப்பட்டு வருகிறது



’ஆஹா கல்யாணம்’ சீரியலில் அக்சயா, விக்ரம் ஸ்ரீ, மௌனிகா உள்ளிட்ட பலர் நடித்து வரும் நிலையில், கர்ப்பமாக இருப்பதாக ஐஸ்வர்யா பொய் சொல்லி வரும் நிலையில் அவரது பொய் எப்போது வெளிப்படும் என்று பாரதியாளர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தான் இந்த சீரியலில் கணவன் மனைவி இருவரும் பாத்ரூமில் ஷவரில் குளிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

சேர்ந்து ஷவரில் குளித்தால் தண்ணீரை மிச்சப்படுத்தலாம் என்ற வசனத்துடன் கூடிய இந்த காட்சியை பார்வையாளர்களால் ட்ரோல் செய்யப்படுகிறது. உலகத்திலேயே பாத்ரூமில் பட்டுப்புடவை அணிந்து ஷவரில் குளிப்பவர்கள் இவராகத்தான் இருக்கும் என்று நாயகியை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

கோடையில் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க டிப்ஸ் தருவதாக சொல்லி நாயகன் நாயகி ஒன்றாக குளிப்பது போல் வைத்திருக்கும் காட்சியை அமைக்க இந்த இயக்குநருக்கு எப்படி தான் ஐடியா வந்தது தெரியவில்லை என்றும் பல காமெடி கமெண்ட்களை நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர். மேலும் சிலர், குடும்பத்தோடு குழந்தைகள் பார்க்கும் சீரியலில் குளியல் காட்சி எதற்கு என்று கேட்ட இதற்குத்தான் டிவிக்கும் கண்டிப்பாக சென்சார் தேவைப்படும் என்றும் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement