மக்களை பெரிதும் ஈர்த்து வரும் "குக் வித் கோமாளி" சீசன் 6 குறித்து தற்போது ஆவலாகக் காத்திருக்கும் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சிரிப்பும், சமையல் திறமையும் கலந்து உருவாக்கப்பட்ட இந்த ரியாலிட்டி ஷோ, ஒவ்வொரு வாரமும் எமோஷனல் நிறைந்ததாக காணப்படுகின்றது. அந்த வகையில், இந்த வாரம் உமைர் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்படுவது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சீசனில், வியப்பூட்டும் திறமை மற்றும் தனித்துவமான நகைச்சுவை உணர்வுடனேயே அதிகளவான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு, கடந்த மூன்று வாரங்களாக கடுமையான சமையல் போட்டிகளில் ஈடுபட்டனர்.
சமீபத்தில் நிகழ்ந்த எபிசொட்டின் அடிப்படையில் , அனைத்து அணிகளின் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்ட போது, குறைவான மதிப்பெண்கள் பெற்ற போட்டியாளராக உமைர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், பங்கேற்பாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.
உமைரின் வெளியேற்றம் மட்டுமல்லாமல், அதனை தொடர்ந்து நிகழ்ந்த உணர்ச்சிமிக்க தருணங்கள் தான் இந்த வார எபிசொட்டின் ஹைலைட்! உமைரின் வெளியேற்றம் அறிவிக்கப்பட்ட தருணத்தில், அவரின் அணித்துணை சுனிதா, நெஞ்சை பதைக்கும் அழுகுரலுடன் கண்ணீர் விட்டார்.
உமைரின் வெளியேற்றத்துக்குப் பிறகு, பல்வேறு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பலரும் “வைல்ட் கார்ட் என்ட்ரியில் உமைர் ஒரு மாஸ் கம்பேக் தர போறாரு” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Listen News!