• May 30 2026

‘கேடி: தி டெவல்’ பாடலால் கிளம்பிய சர்ச்சை!சஞ்சய் தத் மீது தொடரும் குற்றச்சாட்டுகள்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

கன்னட நடிகர் துருவ் சார்ஜா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் “கேடி: தி டெவல்”. கன்னட இயக்குனர் பிரேம் இயக்கியுள்ள இப்படத்தில் ஷில்பா ஷெட்டி, வி. ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், ஜிஷு சென்குப்தா, ரீஷ்மா நனையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார். படம் ஏப்ரல் 30-ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்திலிருந்து வெளியான ‘சர்கி சுனார்’ பாடல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சஞ்சய் தத் மற்றும் நோரா பதேகி இணைந்து நடித்துள்ள இந்த பாடலின் வரிகள் ஆபாசமாக உள்ளதாக பல தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பாடலின் இந்தி பதிப்பு யூடியூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.


மேலும், தமிழில் ‘திற நீ எந்தன் தரணி’ என்ற பாடலும் வெளியாகியுள்ளது. மதன் கார்க்கி எழுதிய இந்த பாடல் பார்ட்டி பாடலாக வெளிவந்துள்ளது.

சஞ்சய் தத் நடித்துள்ள மற்றொரு படத்திலும் இதேபோன்ற ஆபாச குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், இந்த சர்ச்சை மேலும் பரவி வருகிறது.

Advertisement

Advertisement