பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா அக்கினேனி சமீபத்தில் Netflix தளத்தில் வெளியான மேட் இன் கொரியா திரைப்படத்தை பாராட்டியுள்ளார். இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தனது எக்ஸ்தளத்தில் நாகார்ஜுனா பகிர்ந்த கருத்து ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது. அவர் இந்தப் படத்தை “உற்சாகமூட்டும்” மற்றும் “மனதிற்கு இதமான” அனுபவமாக வர்ணித்ததுடன், தற்போதைய மன அழுத்தமான காலங்களில் இப்படம் ஒரு நல்ல மன நிம்மதியை தரும் எனக் குறிப்பிட்டார்.
மேலும், இப்படத்தை இயக்கிய ரா.கார்த்திக் அவர்களுக்கு அவர் தனது பாராட்டுக்களை தெரிவித்தார். ஒரு நல்ல கதையையும், உணர்ச்சிகளையும் சமநிலையுடன் எடுத்துச் சென்றதற்காக அவரை வாழ்த்தினார். இந்த பாராட்டு இயக்குநருக்கு மிகுந்த உற்சாகத்தையும் நன்றியையும் அளித்தது.
அதற்கு பதிலளித்த ரா.கார்த்திக், “சார், உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. இது எனக்கு மிகவும் முக்கியமானது. உங்கள் பாராட்டு எனக்கு மிகுந்த அர்த்தம் கொண்டது. லவ் யூ சார்!” என்று உணர்ச்சிபூர்வமாக தெரிவித்துள்ளார். இந்த பரிமாற்றம் சமூக ஊடகங்களில் ரசிகர்களால் பெரிதும் பகிரப்பட்டது.

“மேட் இன் கொரியா” திரைப்படம் ஒரு உணர்ச்சி மிக்க கதையை மையமாகக் கொண்டுள்ளது. இதில் ஷென்பா என்ற இளம் பெண்ணின் வாழ்க்கைப் பயணம் சொல்லப்படுகிறது. கொரியாவுக்கு தனது காதலனுடன் செல்ல வேண்டும் என்ற அவளது கனவு, எதிர்பாராத துரோகத்தால் சிதைந்து போகிறது. இதனால் அவள் மனதளவில் உடைந்து, தனிமையில் தள்ளப்படுகிறாள். ஆனால் வாழ்க்கை அங்கேயே நின்றுவிடாது என்பதை படம் உணர்த்துகிறது.
Congratulations to my director @Rakarthik_dir for this uplifting film feel good #MadeinKorea on Netflix!! Totally enjoyed it 😊the right medicine for these stressful times💐 special shout out to @priyankaamohan https://t.co/vV5Kqa3Pdq
Listen News!