• Mar 19 2026

உச்சகட்ட கோபத்தில் ருத்ரதாண்டவம் ஆடும் கோமதி.. பதில் பேசமுடியாமல் ஓடிப்போகும் பாண்டியன்

shali / 1 day ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கோமதி பாண்டியனைப் பார்த்து அரசி கல்யாணத்தை எப்படி செய்து வைக்க முடிவெடுத்தீங்க என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டீங்களா என்று கேட்கிறார். மேலும், என்கிட்ட ஒரு வார்த்தை கேட்காமல் ஏன் இப்படி ஒரு முடிவெடுத்தீங்க என்று நான் ஏதும் கேட்டேனா என்கிறார் கோமதி. 

பின் நீங்க ஒரு முடிவெடுத்தால் அது சரியா இருக்கும் என்று நான் நம்பினேன் ஆனா உங்களுக்கு அந்த நம்பிக்கை வரேலயா என்று கேட்கிறார். அதைத் தொடர்ந்து கோமதி நான் ஒன்னும் நாடகம் ஆடல, கோவிலுக்கு தான் போய்ட்டு வந்தேன் என்கிறார். அதைக் கேட்ட சரவணன் யாராவது ஒராளுக்கு போன் பண்ணித் தன்னும் சொல்லியிருக்கலாம் என்கிறார்.


அதுக்கு கோமதி எல்லாரையும் பார்த்து உங்களுக்கும் பொண்டாட்டிகளுக்கும் இடையே பிரச்சனை வந்தால் நான் ஏதாவது செய்து சேர்த்து வைப்பேன்... நீங்க யாராவது முயற்சி பண்ணீங்களா என்று கோபமாக கேட்கிறார். அதைக் கேட்ட பாண்டியன் எதுவுமே கதைக்காமல் அங்கிருந்து கிளம்பி கடைக்குப் போறார். பின் பாண்டியன் சரவணனைப் பார்த்து இப்பதான் தெரியுது கோமதி மனசுக்குள்ள இவ்வளவு விஷயம் இருந்தது என்கிறார்.

மறுபக்கம், கோமதி ராஜியைப் பார்த்து ரொம்ப பேசிட்டேனா என்று கேட்கிறார். அதுக்கு ராஜி கொஞ்சம் பார்த்துப் பேசியிருக்கலாம் என்கிறார். பின் கோமதி காந்திமதியைப் பார்த்து அம்மா உன்கிட்ட சொல்லிட்டுத் தானே போனேன் என்று கேட்கிறார். அதுக்கு காந்திமதி நான் வேணும் என்று தான் சொல்லேல, கோமதியைக் காணேல என்றால் மாப்பிள்ளை பேசுவார் என்று நினைத்தேன் என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.  

Advertisement

Advertisement