தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் (மநீம) கட்சியின் தலைவருமான கமல் ஹாசன், தனது பெயர், புகைப்படம் மற்றும் அடையாளங்களை வர்த்தக ரீதியில் அனுமதியின்றி பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தற்போது திரையுலகத்திலும், அரசியல் வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கு விவரங்களின்படி, “நீயே விடை” என்ற தனியார் நிறுவனம், நடிகர் கமல் ஹாசனின் அனுமதியின்றி அவரது, பெயர், புகைப்படம், “உலகநாயகன்” என்ற பட்டம் மற்றும் அவர் பேசிய பிரபல வசனங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி டி-ஷர்ட், சர்ட் உள்ளிட்ட ஆடைகளை தயாரித்து விற்பனை செய்து வருவதாக கமல் ஹாசன் புகார் தெரிவித்துள்ளார்.
கமல் ஹாசன் தாக்கல் செய்த மனுவில், தனது பெயர் மற்றும் புகைப்படம் தனிப்பட்ட அடையாளம் மட்டுமல்ல, பல ஆண்டுகளாக உழைத்து உருவாக்கிய பிராண்டு மதிப்பு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அடையாளங்களை அனுமதியின்றி வர்த்தக நோக்கில் பயன்படுத்துவது, அவரது தனிநபர் உரிமைகளுக்கு எதிரானது என்று அவர் தெரிவித்துள்ளார்.
Listen News!