தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக பல ஆண்டுகளாக மக்கள் மனங்களைக் கவர்ந்து வந்த நடிகர் விஜய், இனி திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்று அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியது.
திரையுலக வாழ்க்கையை விட அரசியல் மற்றும் மக்கள் சேவையில் முழுமையாக ஈடுபட முடிவு செய்துள்ளதாக விஜய் அறிவித்திருந்த நிலையில், அந்த முடிவுக்குப் பின்னுள்ள காரணங்கள் குறித்து பல்வேறு யூகங்கள் பரவி வந்தன.

இந்த சூழலில், நடிகர் ஜீவா ரவி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டி தற்போது கவனம் பெற்றுள்ளது. அந்த பேட்டியில், விஜய் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பதை அவர் தெளிவாக விளக்கியுள்ளார். அவரது கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
ஜீவா ரவி தனது பேட்டியின் போது," விஜய் நடிக்காமல் தான் இருப்பார். ஏனென்றால் அது அவர் தானே எடுத்த முடிவு. அதை அவர் மாத்தமாட்டார். அவர் அப்படி முடிவெடுக்க காரணம், முழு கவனமும் மக்கள் மேல இருக்க வேணும்.... ஷூட்டிங் அப்படி எந்த விதமான தடையும் வரக் கூடாது என்பது தான்." என தெளிவாக கூறியுள்ளார்.
இந்த ஒரு வரியே, விஜய் எடுத்துள்ள முடிவு எவ்வளவு உறுதியானது என்பதை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பலரும் இது ஒரு தற்காலிக முடிவு என்றும், மீண்டும் விஜய் நடிப்புக்கு திரும்புவார் என்றும் எதிர்பார்த்த நிலையில், ஜீவா ரவியின் இந்த விளக்கம் அந்த நம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
Listen News!