• Jan 23 2026

பிக்பாஸ் 9 உண்மையான வெற்றியாளர் கானா வினோத் தான்.! முத்துக்குமரன் வெளியிட்ட வீடியோ வைரல்

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 9 தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த சில வாரங்களாக ரசிகர்கள் அனைவரும் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், பைனலிஸ்ட் பட்டியலில் விக்ரம், சபரி, வினோத், அரோரா, திவ்யா மற்றும் சாண்ட்ரா ஆகிய ஆறு போட்டியாளர்கள் காணப்பட்டனர். 

இந்த ஆறு போட்டியாளர்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தனர். இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற பணப்பெட்டி டாஸ்க் நிகழ்ச்சியில் கானா வினோத் அதனை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.


பலர் வினோத் டைட்டில் வெற்றி பெறுவார் என எதிர்பார்த்த நிலையில், அவருடைய இந்த முடிவு ரசிகர்களின் மனதில் உணர்ச்சிமிக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. 

அத்துடன், இந்த வார எலிமினேஷனில் சாண்ட்ரா வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. இதனால் பைனலில் சபரி, திவ்யா, விக்ரம் மற்றும் அரோரா ஆகியோர் மட்டுமே மீதமாக இருக்கின்றனர். 

இந்நிலையில் முன்னாள் போட்டியாளர் முத்துக்குமரன் சமீபத்தில் வினோத்தைப் பற்றிய கருத்தை பகிர்ந்துள்ளார். அவர் கூறியது மிகவும் உணர்ச்சிமிகுந்ததாகவும், வினோத்தின் உண்மையான வெற்றியை வெளிப்படுத்தும் வகையிலும் இருந்தது.

முத்துக்குமரன் அதன்போது, "பிக்பாஸ் சீசன் 9 வெற்றியாளர் கானா வினோத் அவர்களுக்கு என்னோட வாழ்த்து. அதாவது, நல்ல கலைஞராகவும் நல்ல கணவராகவும் வெற்றி அடைந்துள்ள கானா வினோத் அண்ணா என்னை பொறுத்த வரையில் வெற்றியாளர் தான்."  எனக் கூறியுள்ளார். 

மேலும், 106 நாள் அங்க இருந்து 50 லட்சம் காசை எடுத்துக் கொண்டு போறது வெற்றி இல்ல. கோடான கோடி மக்களின் அன்பை சம்பாதிக்கிறது தான் வெற்றி. வினோத் அண்ணா பெட்டி எடுத்தவுடனே அச்சோ அவசரப்பட்டு பெட்டியை எடுத்திட்டாரே. அவர் ஜெயிக்க வேண்டிய ஆளே.! என்று நினைத்தேன். " என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement