நடிகை கங்கனா ரனாவத்தை பெண் காவலர் ஒருவர் சண்டிகர் விமான நிலையத்தில் கன்னத்தில் அறைந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து நெட்டிசன்கள் கங்கனா ரனாவத்துக்கு எதிர்ப்பாகவும் கன்னத்தில் அறைந்த பெண் காவலருக்கு ஆதரவாகவும் பலர் பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குனர் சேரன் இந்த விவகாரம் குறித்து நேற்று பதிவு செய்திருந்ததாவது: இந்த பெண்மணியின் கோபத்தில் நியாயம் இருப்பதாக பார்க்கிறேன்.. அந்த அடி நடிகைக்காகனதல்ல. வாக்களித்த மக்களுக்கானது.. விவசாயிகளின் உணர்வு தெரியாமல் பேசிய அந்த வார்த்தைகளுக்கு பின்னும் இந்த கவர்ச்சிக்கு ஓட்டு விழுகிறது என்றால்.. மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off..
சேரனின் இந்த பதிவுக்கு ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்கள் பதிவானது என்பதும் இதே பெண் போலீஸ் வேறு கட்சியின் எம்பி கன்னத்தில் அறைந்து இருந்தால் இந்த பதிவு உங்களிடம் இருந்து வந்திருக்குமா? என்றும் கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில் இயக்குநர் சேரன் இதற்கு விளக்கம் கொடுத்து இன்று மீண்டும் ஒரு பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: ஒரு விசயத்தை அதன் உட்பொருள், நியாயம், மற்றவர்களின் உணர்வுகள் எதையும் புரியாமல் தான் சார்ந்த கட்சிகளின் மேல் கொண்ட அதீத அன்பால் நிறம் பிரித்து பார்க்க தெரியாமல்.. அதை காரணம் கொண்டு வெறுப்பை உமிழ்ந்து அநாகரீகமாக பதிவிடுவதை நிறுத்தும்வரை எந்த சாமானியனும் முன்னேற போவதில்லை.. நன்றி..
இதற்கு பெரும்பாலும் நெகட்டிவ் கமெண்ட் வந்து கொண்டிருந்தாலும் ஒரு சிலர் சேரனுக்கு ஆதரவான கமெண்ட் பதிவு செய்கின்றனர். அரை மூளை கூட்டம் அப்படித்தான் இருக்கும் அண்ணா என்றும் ஒருவர் பதிவு செய்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் சில நெகட்டிவ் கமெண்ட்ஸ் களும் பதிவாகி வருகின்றன, அந்த கமெண்ட் இதோ:
தனிப்பட்ட கருத்துக்கள் 1000 இருக்கலாம். விதிமுறை என்பது அனைவருக்கும் சமம். ஒரு பாதுகாவலர் பாதுகாப்பை விட்டு ஒருவரை அறைவது எக்காரணம் ஆனாலும் தவறு. இதற்கு சப்பு கொட்டுவது, எந்த வகை நேர்மை? ஒருவர் செய்த தவறுக்கு தண்டிக்க சட்டம் உள்ளது. யாரும் சட்டத்தை கையில் எடுக்க கூடாது.
உட்பொருள், நியாயம், மற்றவர்களின் உணர்வு அறிந்துதான் நீங்கள் உங்கள் முந்தைய பதிவினை போட்டீர்களா? ஒரு கருத்திற்கு வன்முறை தீர்வாகுமா? உங்கள் பதிவு பிடிக்கவில்லை என உங்களை கன்னத்தில் அறைந்தால் ஏற்றுக்கொள்வீர்களா? தவறான விஷயத்திற்கு இப்படி முட்டு குடுப்பீங்க என எதிர்பார்க்கவில்லை
கருத்துக்கு மறுப்பு பதில் கருத்து தான் கூற வேண்டுமே தவிர கன்னத்தில் அறைவது,துப்பாக்கி குண்டு மூலம் பதில் சொல்வது எல்லாம் தீவிரவாதம், அதெல்லாம் அவரவர்களுக்கு வந்தால் தான் தெரியும், உதாரணம் தான் பெற்ற மகளை அடையாளம் தெரியாத நபர் இழுத்து கொண்டு ஓடினால், அந்த வலி இருக்கிறதே? சரிதானே!
பெண் அடித்தது எவ்வளவு பெரிய தவறு, எவ்வளவு பெரிய வெறுப்பு, அதைத்தான் கண்டிக்க வேண்டுமே தவிர, அதை ஆதரித்து, பின்பு அதற்கு வரும் எதிர்ப்பை வெறுப்பு என்று சொல்வது என்ன நியாயம்? இந்த சம்பவத்தை ஆதரிப்பது தவறு, அனைவரும் அவர்களுக்கு தோன்றுவதை சரி என்று நினைத்து வன்முறைகளை எடுத்தால் என்ன ஆவது?
Listen News!