• Apr 02 2025

ஐஸ்வர்யா ரேஞ்சுக்கு செதுக்கப்பட்ட 'பிரவுன் பியூட்டி'.. சும்மா தக தகவென மின்னுறீங்களே..!

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

உத்ரா பிரதேச மாநிலத்தில் மகா கும்பமேளா விழாவில் ருத்ராட்ச மாலை விற்று வந்த மோனாலிசா போஸ்லே என்ற  பெண்ணை அவருடைய வசீகரத் தோற்றத்தின் காரணமாக பலரும் வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்து பிரபலம் அடையச் செய்தனர். 

இதைத்தொடர்ந்து அவருடைய புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலான நிலையில் பலரும் அவரைத் தேடி புகைப்படம், பேட்டி எடுத்தார்கள். அதன் பின்பு அவருக்கு பாலிவூட் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு ஒன்றையும் பிரபல இயக்குநர் வழங்கி இருந்தார். 

d_i_a

ஆரம்பத்தில் சிகப்பு நிற உடையில் துறவி போல காட்சியளித்த மோனாலிசா போஸ்லேவை 'பிரவுன் பியூட்டி' என சமூக வலைதள பக்கங்களில் புகைப்படத்துடன் பகிர்ந்து பிரபலமாக்கினர். இதனால் அவருடைய வியாபாரத்தை கவனிக்க முடியவில்லை என்றும் அவரது பாதுகாப்புக்கு இடையூறு இருப்பதாகவும் அவரை சொந்த ஊருக்கே அவருடைய பெற்றோர் அனுப்பி வைத்தார்கள்.


இதைத் தொடர்ந்து அழகு நிலையம் ஒன்றுக்கு சென்ற மோனாலிசா தன்னை அழகு படுத்திய காட்சிகளும் இணையத்தில் வேகமாக பரவின. மேலும் அந்த வீடியோவுக்கு கிட்டத்தட்ட ஒரு மில்லியன் லைக்குகள் குவிந்தன. அதுமட்டுமில்லாமல் மோனாலிசாவை வைத்து பலரும் ஓவியங்கள் வரைய ஆரம்பித்துள்ளார்கள்.

இந்த நிலையில், மோனாலிசா போஸ்லேயின் புதிய வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் அவர் பார்ப்பதற்கு பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா போலவே காணப்படுகின்றார். தற்போது இந்த வீடியோ பலரையும் கவர்ந்துள்ள நிலையில், இனி வரும் நாட்களில் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியும் என நம்பப்படுகின்றது.

Advertisement

Advertisement